2012-க்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் கேன் வில்லியம்சன் ரன் அவுட்; வைரலாகும் காணொளி!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கிட்டத்திட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
ஆனாலும் கடைசிவரை களத்தில் இருந்த கேமரூன் க்ரீன் அபாரமான ஆட்டத்த வெளிப்படுத்து சதமடித்ததுடன், 23 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 174 ரன்களைக் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 383 ரன்களைச் சேர்த்து வலுவான நிலையில் ஆல் அவுட்டானது. அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்து நியூசிலாந்து அணியில் நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
Trending
அதிலும் குறிப்பாக அந்த அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் ரன்கள் ஏதுமின்றி இப்போட்டியில் ரன் அவுட் முறை விக்கெட்டை இழந்தார். அதன்படி மிட்செல் ஸ்டார் பந்துவீச்சில் பந்தை கவர் திசையில் அடித்து விட்டு சிங்கிள் எடுக்க கேன் வில்லியம்சன் முயற்சித்தார். அப்போது அவர் சிங்கிள் எடுக்க ஓடிய போது களத்தில் ஸ்டார்க் நிற்க, அதனை எதிர்பார்க்கமால் நான் ஸ்டிரைக்கர் திசையிலிருந்து ஓடிய வில் யங்கும் அதே திசையில் ஓடினார்.
இதனால் கேன் வில்லியம்சன் - வில் யங் இருவரும் ஒருவருக்கு ஒருவர் நேருக்கு நேர் மோடிக்கொண்டு தடுமாறினர். இதனை பயன்படுத்து மார்னஸ் லபுஷாக்னே ஸ்டம்பை த்ரோ அடித்து தகர்த்தார். இதன் காரணமாக கேன் வில்லியம்சன் தனது விக்கெட்டை இழந்து ரன்கள் ஏதுமின்றி பெவிலியனுக்கு திரும்பினார். அதிலும் குறிப்பாக கடந்த 2012ஆம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் கேன் வில்லியம்சன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழப்பது இதுவே முதல் முறையாகும்.
இதனால் ஏமாற்றமடைந்த கேன் வில்லியம்சன் வருத்ததுடன் பெவிலியனுக்கு சென்றார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானதுடன், முதல் இன்னிங்ஸில் 204 ரன்கள் பின் தங்கியுள்ளது. இந்நிலையில் கேன் வில்லியம்சன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now