
இந்தியா, நியூசிலாந்து அணிகள் வரும் 18ஆம் தேதி முதல் டி20 போட்டி கொண்ட தொடரில் மோதுகிறது. இதற்காக இந்திய அணி, வெல்லிங்டனுக்கு சென்று பயிற்சி செய்து வருகிறது. 2022 டி20 உலககோப்பை தொடருக்கு பிறகு இந்தியா பங்கேற்கும் முதல் தொடர் இதுவாகும்.
இந்த தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி,கேஎல் ராகுல், தினேஷ் கார்த்திக்,ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய முன்னணி வீரர்கள் இடம்பெறவில்லை. 2024ஆம் ஆண்டு டி20 உலககோப்பை தொடருக்கு இந்திய அணியை தயார் படுத்தும்விதமாக முழுக்க முழுக்க இளம் வீரர்களை கொண்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி இந்த தொடரில் விளையாடுகிறது.
நடந்து முடிந்த டி20 உலககோப்பையில் ராகுல், ரோகித் ஜோடி செயல்பாடு விமர்சனத்துக்கு ஆளான நிலையில் இந்த தொடரில் புதிய ஜோடி களமிறங்குகிறது. இஷான் கிஷன், சுப்மான் கில், ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த் ஆகியோருக்கு இந்த தொடர் பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது.