அபாரமான த்ரோவின் மூலம் படிதாரை ரன் அவுட்டாக்கிய கருண் நாயர் - காணொளி!
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸின் கருண் நாயர் அடித்த ரன் அவுட் குறித்த காணொளி வைரலாகி வருகிறது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் பெரிதளவி ரன்களைச் சேர்க்க முடியாமல் விக்கெட்டை இழந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக கேஎல் ராகுல் 41 ரன்களையும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 34 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆர்சிபி தரப்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Also Read
இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு விராட் கோலி மற்றும் ஜேக்கப் பெத்தல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய பெத்தெல் 12 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கியா தேவ்தத் படிக்கல் ரன்கள் ஏதுமின்றியும், ரஜத் படிதார் 6 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் ஆர்சிபி அணி 26 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்நிலையில் இப்போட்டியில் ரஜத் படிதார் ஆட்டமிழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி இன்னிங்ஸின் 4ஆவது ஓவரின் கடைசி பந்தை விராட் கோலி மிட் ஆன் திசையில் அடித்து ரன் எடுக்க முயற்சித்த நிலையில், மறுமுனையில் இருந்த ரஜத் பட்டிதார் பந்தை பார்க்காமல் ஓட தொடங்கினார். ஆனால் அப்போது அத்திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த கருண் நாயர் பந்தை பிடித்த கையோடு அதனை ஸ்டம்பை நோக்கி த்ரோ அடித்தும் அசத்தினார்.
இதனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஜத் படிதார் 6 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் கருண் நாயரின் அபாரமான ரன் அவுட்டின் மூலம் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இந்நிலையில் இக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதேசமயம் ஆர்சிபி அணியை பொறுத்தவரையில் விராட் கோலி மற்றும் குர்னால் பாண்டியா இணை அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
— IndianPremierLeague (@IPL) April 27, 2025
Karun Nair with a superb direct-hit #RCB lose their skipper in the chase!
Updates https://t.co/9M3N5Ws7Hm#TATAIPL | #DCvRCB | @DelhiCapitals | @karun126 pic.twitter.com/al5wBbHAhe
டெல்லி கேப்பிடல்ஸ் பிளேயிங் லெவன்: ஃபாஃப் டு பிளெசிஸ், அபிஷேக் போரல், கருண் நாயர், கேஎல் ராகுல், அக்ஸர் படேல்(கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், துஷ்மந்த சமீரா, குல்தீப் யாதவ், முகேஷ் குமார்.
இம்பேக்ட் வீரர்கள்: அஷுதோஷ் சர்மா, மோஹித் ஷர்மா, ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க், மாதவ் திவாரி, திரிபுரானா விஜய்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு விளையாடும் லெவன்: விராட் கோலி, ஜேக்கப் பெத்தேல், ரஜத் படிதார்(கேப்டன்), ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், குர்னால் பாண்டியா, ரொமாரியோ ஷெப்பர்ட், புவனேஷ்வர் குமார், சுயாஷ் சர்மா, ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்.
Also Read: LIVE Cricket Score
இம்பேக்ட் வீரர்கள்: தேவ்தத் படிக்கல், லியாம் லிவிங்ஸ்டோன், ரசிக் தார் சலாம், மனோஜ் பந்தேஜ், ஸ்வப்னில் சிங்
Win Big, Make Your Cricket Tales Now