
இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 24ஆவது லீக் போட்டியில் சதர்ன் பிரேவ் மற்றும் டிரெண்ட் ராக்கெட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டிரெண்ட் ராக்கெட்ஸ் அணியானது தொடக்கம் முதலே சீரான வேகத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அந்த அணியில் தொடக்க வீரர் டாம் பாண்டன் 30 ரன்களைச் சேர்த்த நிலையில், அவரைத்தொடர்ந்து விளையாடிய ஆடம் லித் 16, அலெக்ஸ் ஹேல்ஸ் 15, ஜோ ரூட் 16, ரோவ்மன் பாவெல் 16, லூயிஸ் கிரிகோரி 19 ரன்களைச் சேர்க்க அந்த அணி இன்னிங்ஸ் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்களைச் சேர்த்தது. சதர்ன் பிரேவ் அணி தரப்பில் கிறிஸ் ஜோர்டன் 3 விக்கெட்டுகளையும், ஜோஃப்ரா ஆர்ச்சர், பிரிக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சதர்ன் பிரேவ் அணிக்கு அலெக்ஸ் டேவிஸ் - ஜேம்ஸ் வின்ஸ் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 43 ரன்கள் சேர்த்த நிலையில், இருவரும் தலா 28 ரன்களைச் சேர்த்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஆண்ட்ரே பிளெட்சர், லூயிஸ் டு பிளூய், லௌரி எவான்ஸ் ஆகியோரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.