அசத்தலான கேட்சைப் பிடித்து அசரவைத்த லுங்கி இங்கிடி- வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டி கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதனத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி இம்முறை பேட்டிங்கில் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதன்படி அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் பில் சால்ட் 8 ரன்னிலும், ஜேமி ஸ்மித் ரன்கள் ஏதுமின்றியும், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் டக்கெட் 24 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, அதன்பின் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார்.
Trending
இதில் ஹாரி ப்ரூக் 19 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோ ரூட் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 37 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 25 ரன்களையும், கேப்டன் ஜோஸ் பட்லர் 21 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் ரன்களைச் சேர்க்க தவறினர்.
இதனால் இங்கிலாந்து அணி 38.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன், 179 ரன்களில் ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் மார்கோ ஜான்சன் மற்றும் வியான் முல்டர் தலா 3 விக்கெட்டுகளையும், கேசவ் மஹாராஜ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்நிலையில் இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைராகி வருகிறது.
அதன்படி இன்னிங்ஸின் 26ஆவது ஓவரை காகிசோ ரபாடா வீசிய நிலையில், அந்த ஓவரின் மூன்றாவது பந்தை எதிர்கொண்ட ஜேமி ஓவர்டன் இறங்கி வந்த அடிக்க முயன்றார். ஆனால் பந்து அவரின் பேட்டில் சரியாக படாத காரணத்தால் காற்றில் இருந்தது. அப்போது மிட் ஆன் திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த லுங்கி இங்கிடி பின்னோக்கி சென்றவாறு ஓடியதுடன் அபாரமான கேட்ச்சையும் பிடித்து அசத்தினார்.
இதனால் இப்போட்டியில் 11 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஜேமி ஓவர்டன் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் லுங்கி இங்கிடி பிடித்த இந்த அபாரமான கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து 180 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணியானது தற்போது பேட்டிங் செய்து வருகிறது.
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: பிலிப் சால்ட், பென் டக்கெட், ஜேமி ஸ்மித்(வ), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர்(சி), லியாம் லிவிங்ஸ்டோன், ஜேமி ஓவர்டன், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், சாகிப் மஹ்மூத்
Also Read: Funding To Save Test Cricket
தென் ஆப்பிரிக்கா பிளேயிங் லெவன்: டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன், ராஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம்(கேட்ச்), ஹென்ரிச் கிளாசென்(டபிள்யூ), டேவிட் மில்லர், வியான் முல்டர், மார்கோ ஜான்சன், கேசவ் மஹராஜ், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி
Win Big, Make Your Cricket Tales Now