சிஎஸ்கே ரசிகர்களுக்கு பாட்டு பாடிய நிடினி; வைரலாகும் அஸ்வினின் காணொளி!
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் மகாயா நிடினி, இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடையேயான உரையாடல் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா அங்கு முதலாவதாக நடைபெற்ற டி20 தொடரை 1 – 1 என்ற கணத்தில் சமன் செய்தது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 – 1 என்ற கணக்கில் வென்ற இந்தியா அடுத்ததாக நடந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்து.
இருப்பினும் 2ஆவது போட்டியில் வென்ற இந்தியா 13 வருடங்கள் கழித்து தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை சமன் செய்து ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்பியுள்ளது. முன்னதாக கேப் டவுனில் நடைபெற்ற 2ஆவது போட்டியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடும் 11 பேர் கொண்ட இந்திய அணியில் வாய்ப்பு பெறவில்லை.
Trending
ஆனால் அந்த போட்டியின் போது முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் மகாயா நிடினியை சந்தித்த அவர் பல்வேறு அம்சங்களை விவாதித்தார். அப்போது “இது சிஎஸ்கே ரசிகர்களுக்காக. நீங்கள் அவர்களுக்கு ஹலோ சொல்லுங்கள்” என அஸ்வின் அவரிடம் கேட்டுக் கொண்டார். சிஎஸ்கே என்ற வார்த்தையை கேட்டதுமே உற்சாகத்தில் பொங்கி எழுந்த நிடினி வேடிக்கையான சில ரியாக்ஷன்களை கொடுத்தார்.
அத்துடன் “கபி கபி தில் ஹோத்தா ஹே” என்று தமிழ் திரைப்படத்தில் மணிவண்ணன் மற்றும் கவுண்டமணி ஆகியோர் பாடிய இந்தி பாடலை அவர் நகைச்சுவையாக அறையும் குறையுமாக பாடினார். அதை சற்றும் எதிர்பார்க்காத அஸ்வின் வாய்விட்டு சிரித்துவிட்டு அவரிடம் கை கொடுத்து மீண்டும் சந்திப்போம் என்று சொல்லி அங்கிருந்து கிளம்பினார். தற்போது யூடியூப் பக்கத்தில் அஸ்வின் பகிர்ந்துள்ள இந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
This was sooo funny!! How many of you enjoyed this sweet little cameo by Makhaya Ntini? @ashwinravi99 pic.twitter.com/bKX5WdLqca
— Crikipidea (@crikipidea) January 6, 2024
அதாவது ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008 – 2009 கால கட்டங்களில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய நிடினி இப்போதும் சிஎஸ்கே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். அதே போல சென்னைக்காக விளையாடிய போது ஏதோ ஒரு தருணத்தில் அந்த நகைச்சுவை காட்சியில் கேட்ட பாடலை தற்போது பாடி காட்டிய நிடினி இன்னும் சிஎஸ்கே அணிக்காக விளையாடியதையும் அங்குள்ள ரசிகர்களையும் மறக்கவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now