
பிக் பேஷ் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 40ஆவது லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில் பியூ வெப்ஸ்டர் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினர்.
இதன்மூலம், இதன்மூலம் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கிளென் மேக்ஸ்வெல் 5 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என 76 ரன்களையும், பியூ வெப்ஸ்டர் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 51 ரன்களையும் சேர்த்தனர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஹரிகேன்ஸ் அணியானது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தனர்.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் நாதன் எல்லிஸ் 22 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 40 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறினர். இதனால் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறியும் அசத்தியது.