அதிரடியில் மிரட்டிய டேவிட் வார்னர்; அபாரமான கேட்சை பிடித்த பதிரனா - வைரலாகும் காணொளி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சிஎஸ்கே வீரர் மதீஷா பதிரனா பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 13ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி இன்றைய போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் பிரித்வி ஷாவிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
இதையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு டேவிட் வார்னர் - பிரித்வி ஷா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தொடக்கத்தில் நிதானம் காட்டிய இருவரும், மூன்றாவது ஓவரிலிருந்து அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசித் தள்ளினர். இதன் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதல் 6 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 62 ரன்களை குவித்து அசத்தியது.
Trending
இப்போட்டியில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து மிரட்டினார். அதுமட்டுமின்றி முதல் விக்கெட்டிற்கு டேவிட் வார்னர் - பிரித்வி ஷா இருவரும் இணைந்து 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இப்போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த டேவிட் வார்னர் 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 52 ரன்கள் சேர்த்த நிலையில் பதிரனாவின் அபாரமான கேட்சின் மூலம் விக்கெட்டை இழந்தார்.
அதன்படி ஆட்டத்தின் 10ஆவது ஓவரை முஸ்தஃபிசூர் ரஹ்மான் வீசினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தை எதிர்கொண்ட டேவிட் வார்னர் ஸ்வீப் ஷாட் மூலம் விக்கெட் கீப்பருக்கு பின்னால் அடிக்க முயற்சித்தார். ஆனால் பந்த சரியாக கணிக்க தவறிய டேவிட் வார்னர் பந்தை அடிக்க, அப்போது ஸ்கொயர் லெக் திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த மதீஷா பதிரனா டைவ் அடித்து பந்தை கேட்ச் பிடித்து அசத்தினார்.
— IndianPremierLeague (@IPL) March 31, 2024
Matheesha Pathirana takes a one hand diving catch to dismiss David Warner who was on song tonight
Watch the match LIVE on @JioCinema and @StarSportsIndia#TATAIPL | #DCvCSK | @ChennaiIPL pic.twitter.com/sto5tnnYaj
இதனை சற்று எதிர்பாராத டேவிட் வார்னர் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார். அதேபோல் மதீஷா பதிரனாவும் பந்தை பிடித்த ஆச்சரியத்தில் ஒருநிமிடம் உறைந்து தரையோடு தரையாக அமைர்ந்து கொண்டார். இதனால் டேவிட் வார்னர் 52 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இந்நிலையில் மதிஷா பதிரனா பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now