
நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு தொடக்க வீரர் பதும் நிஷங்கா அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் தசைப்பிடிப்பின் காரணமாக அவர் களத்தில் இருந்து பாதியிலேயே பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த அவிஷ்கா ஃபெர்னாண்டோ - குசால் மெண்டிஸ் இணை அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினர். இதில் அவிஷ்க 17 ரன்னில் ஆட்டமிழக்க, அரைசதம் கடந்த குசால் மெண்டிஸும் 54 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதனத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சரித் அசலங்கா ரன்கள் ஏதுமின்றியும், காயத்தை பொறுட்படுத்தாமல் விளையாடிய பதும் நிஷங்கா 66 ரன்களிலும் என ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். .
இதையடுத்து களமிறங்கிய வீரர்களில் ஜனித் லியானகே ஒருபுறம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் கள்மிறங்கிய சமிந்து விக்ரமசிங்கே 19 ரன்னிலும், வநிந்து ஹசரங்கா 15 ரன்லும் விக்கெட்டை இழந்தனர். இறுதியில் ஜனித் லியானகேவும் 53 ரன்களில் ஆட்டமிழக்க, இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டை இழப்பிற்கு 290 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 4 விக்கெட், மிட்செல் சாண்ட்னெர் 2 விக்கெட் வீழ்த்தினர்.