WATCH: Michael Bracewell Takes Hat-Trick In His First Over In T20Is; Takes Kiwis To Win Against Irel (Image Source: Google)
நியூசிலாந்து - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான 2ஆவது டி20 போட்டி நேற்று பெல்ஃபெஸ்டில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது.
180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அயர்லாந்து வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். 13.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 91 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடக்கிறது.