அபாரமான கேட்சை பிடித்த மிலன் ரத்நாயக்க; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வீரர் மிலன் ரத்நாயக்க பிடித்த கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது லண்டனில் உள்ள லார்ஸ்ட் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜோ ரூட் 143 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை கஸ் அட்கின்சன் 74 ரன்களுடனும், மேத்யூ போட்ஸ் 20 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் தொடர்ந்து அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய கஸ் அட்கின்சன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுமுனையில் மேத்யூ போட்ஸ் 21 ரன்னிலும், கஸ் அட்கின்சன் 118 ரன்களிலும், ஒல்லி ஸ்டோன் 15 ரன்னிலும் என விகெட்டை இழந்தனர்.
Trending
இதனால் இங்கிலாந்து அணியானது முதல் இன்னிங்சில் 102 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 427 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜோ ரூட் 143 ரன், கஸ் அட்கின்சன் 118 ரன்கள் எடுத்தனர். இலங்கை தரப்பில் அசிதா பெர்ணாண்டோ 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கி விளையாடி வரும் இலங்கை அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இந்நிலையில் இப்போட்டியில் இலங்கை அணி வீரர் மிலன் ரத்நாயக்க பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அதன்படி இப்போட்டியில் சதமடித்து விளையாடி வந்த கஸ் அட்கின்சன் 118 ரன்களை எடுத்திருந்த நிலையில் அசிதா ஃபெர்னாண்டோ பந்துவீச்சில் பவுண்டரி அடிக்கும் முயற்சியில் தூக்கி அடித்தார். ஆனால் பந்தை அவர் சரியாக டைமிங் செய்யாததால் அது பவுண்டரியை நோக்கி சென்றது.
A sensational catch marks the end of a brilliant innings
— England Cricket (@englandcricket) August 30, 2024
Well batted, Gus pic.twitter.com/tVX53BZdT1
Also Read: Funding To Save Test Cricket
அப்போது அத்திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த மிலன் ரத்நாயக்க பந்தை சரியாக கணித்ததுடன் டைவ் அடித்து கேட்ச் பிடித்தும் அசத்தினார். இதனால் 14 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 118 ரன்களை எடுத்த நிலையில் கஸ் அட்கின்சன் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். மேற்கொண்டு அடுத்து களமிறங்கிய ஒல்லி ஸ்டோனும் 15 ரன்களுடன் விக்கெட்டை இழக்க இங்கிலாந்து அணியும் ஆல் அவுட்டானது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now