கருண் நாயரின் விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தை மாற்றிய சான்ட்னர் - காணொளி!
மிட்செல் சான்ட்னர் தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் கருண் நாயரின் விக்கெட்டை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இப்போட்டியில் டெல்லி அணி வெற்றி பெறுவதற்கு அதிகபடியான வாய்ப்புகள் இருந்த நிலையிலும், அந்த அணியின் கருண் நாயர் ஆட்டமிழந்த பிறகு அணியின் பேட்டிங் ஆர்டர் மொத்தமாக சோபிக்க தவறி தோல்வியைத் தழுவியது. இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸுக்காக இம்பேக்ட் வீரராக களமிறங்கிய கருண் நாயர் அதிரடியாக விளையாடியதுடன் 22 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்து மிரட்டினார்.
Also Read
தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த அவர் 12 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 89 ரன்களைச் சேர்த்திருந்தார். அப்போது இன்னிங்ஸின் 12ஆவது ஓவரை மிட்செல் சான்ட்னர் வீசிய நிலையில், அந்த ஓவரின் நான்காவது பந்தை எதிர்கொண்ட கருண் நாயர் பந்தை சரியாக கணிக்க தவறியதுடன் க்ளீன் போல்டாகினார். இதனால் இப்போட்டியில் சதமடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கருண் நாயர் 89 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.
மேலும் இந்த போட்டியில் டெல்லி அணி தோல்வியடைந்ததற்கும் அந்த விக்கெட் முக்கிய காரணமாக அமைந்தது. ஏனெனில் அதன்பின் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்போட்டியில் மிட்செல் சான்ட்னர் தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் கருண் நாயரின் விக்கெட்டை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Santner is a magician- Easily better than Vettori pic.twitter.com/y527gSWnN4
— Kaffe Americano (@ParrotBeaker) April 13, 2025இப்போட்டி குறித்து பேசினால் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. அந்த அணியில் சிரப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக் வர்மா அரை சதம் கடந்ததுடன் 59 ரன்களையும், அணியின் நட்சத்திர வீரர்கள் ரியான் ரிக்கல்டன் 41 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 40 ரன்களையும், நமன் தீர் 17 பந்தில் 38 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில் அதிரடியாக விளையாடிய கருண் நாயர் 89 ரன்களையும், அபிஷேக் போரால் 33 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now