ரவி பிஷ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் விளாசிய மொயீன் அலி - வைரல் காணொளி!
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிஸ்கே வீரர் மொயீன் அலி அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்களை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களைச் சேர்த்தது. அதன்படி இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரச்சின் ரவீந்திரா, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் இணைந்த அஜிங்கிய ரஹானே - ரவீந்திர ஜடேஜா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அஜிங்கியா ரஹானே 36 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஷிவம் தூபே, சமீர் ரிஸ்வி ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய மொயீன் அலியும் 30 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார்.
Trending
இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரவீந்திர ஜடேஜா 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 57 ரன்களையும், மகேந்திர சிங் தோனி 3 பவுண்ட்ரி, 2 சிக்ஸர்கள் என 28 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான் ரன்களைச் சேர்த்தனர். இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடி வருகிறது.
MAXIMUM x
— IndianPremierLeague (@IPL) April 19, 2024
Moeen Ali and @ChennaiIPL aiming for an explosive finish with the bat
Watch the match LIVE on @JioCinema and @StarSportsIndia #TATAIPL | #LSGvCSK pic.twitter.com/zheM5RcVVB
இந்நிலையில் இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மொயீன் அலி, இன்னிங்ஸின் 17ஆவது ஓவரை வீசிய ரவி பிஷ்னோய் பந்துவீச்சில் அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்களை விளாசி மிரட்டினார். அதன்படி அந்த ஓவரின் முதல் பந்தை தவறவிட்ட மோயீன், அடுத்து மூன்று பந்துகளில் சிக்ஸர்களை விளாசினார். அதன்பின் அந்த ஓவரின் 5ஆவது பந்தை சிக்ஸர் அடிக்க முயற்சித்த அவர் லாங் ஆன் திசையில் இருந்த ஆயூஷ் பதோனியிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் அவர் அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்களை அடித்த காணொளி வைரலாகியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now