
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
இந்நிலையில் நாளை நடைபெறும் 12ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இவ்விரு அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைக்க இப்போட்டியில் வெற்றிபெறுவது இரு அணிகளுக்கும் முக்கியமாகும்.
இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதன்படி ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்கள் இன்று தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டனர். இதில் காயமடைந்ததாக கூறப்படும் ரோஹித் சர்மா, முகமது ஷமி ஆகியோரும் வலைகளில் திவீரமான பயிற்சிய மேற்கொண்டு வருகின்றன.