
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது முஷ்ஃபிகுர் ரஹிம் கொடுத்த கேட்சை பாய்ண்ட் திசையில் நின்றிருந்த ஜடேஜா புலி போல் பாய்ந்து பிடித்தார். இதனை பார்த்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் சக வீரர்கள் மிரண்டனர். அந்த கேட்சை பிடித்த பின் இந்திய வீரர் ஜடேஜா, உடனடியாக பயிற்சியாளர் திலீபை பார்த்து சிறந்த ஃபீல்டருக்கான பதக்கம் எனக்கு தான் என்று சைகையில் கூறினார்.
அப்போது பயிற்சியாளர் திலீப் அருகில் இருந்த நடுவர் எராஸ்மஸும் ஜடேஜா பதக்கம் கொடுக்க வேண்டும் என்று சிபாரிசு செய்தார். அதன்பின் ஜடேஜாவுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்து பயிற்சியாளர் சிறந்த ஃபீல்டருக்கான பதக்கத்தை அவருக்கு அளித்தார். இதனிடையே ஜடேஜாவின் கொண்டாட்ட காணொளி ரசிகர்களிடையே ட்ரெண்டாகியது.
இந்த நிலையில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து கான்வே - யங் கூட்டணி தொடக்கம் கொடுக்க, இந்திய அணி தரப்பில் பும்ரா முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரில் ஒரு ரன்கள் கூட வழங்கப்படவில்லை.