பதிரானா பந்துவீச்சில் சிக்ஸர் விளாசிய எம்எஸ் தோனி - காணொளி
மதிஷா பதிரானாவின் யார்க்கர் பந்தில் மகேந்திர சிங் தோனி சிக்ஸர் அடிக்கும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் மார்ச் 22ஆம் தேதி நடைபெறவுள்ளது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
அதன்பின் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியானது மார்ச் 23ஆம் தேதியானது சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும் இந்தாண்டு ஐபிஎல் தொடருடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறுவார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளதால், இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.
Trending
இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கான பயிற்சி முகாமை ஏற்பாடுசெய்துள்ளது. இதையடுத்து அந்த அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் பயிற்சியின் போது அந்த அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானாவின் பந்துவீச்சில் சிக்ஸர் விளாசி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் காணொளிகளை வெளியிட்டு வருகிறது. அதில் ஒரு காணொளியில் மதிஷா பதிரானா மகேந்திர சிங் தோனிக்கு பந்துவீசுவதை காணலாம். அப்போது பதிரானா தனது யார்க்கர் பந்தை வீசிய நிலையில் அதனை எதிர்கொண்ட மகேந்திர சிங் தோனி தனது டிரேட்மார்க் ஷாட்டான 'ஹெலிகாப்டர் ஷாட்டின்' மூலம் சிக்ஸரை விளாசினார். இந்நிலையில் இக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
on LP #WhistlePodu #Yellove pic.twitter.com/TDWRLfoqNN
— Chennai Super Kings (@ChennaiIPL) March 19, 2025Also Read: Funding To Save Test Cricket
சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, மதீஷா பதிரானா, நூர் அகமது, ரவிச்சந்திரன் அஸ்வின், டெவோன் கான்வே, கலீல் அகமது, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், சாம் கரன், ஷேக் ரஷித், அன்ஷுல் கம்போஜ், முகேஷ் சௌத்ரி, தீபக் ஹூடா, குர்ஜன்பிரீத் சிங், நாதன் எல்லிஸ், ஜேமி ஓவர்டன், கமலேஷ் நாகர்கோட்டி, ராமகிருஷ்ணன் கோஷ், ஸ்ரேயாஸ் கோபால், வான்ஷ் பேடி, ஆண்ட்ரே சித்தார்த்.
Win Big, Make Your Cricket Tales Now