
டி20 உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்றுப்போட்டிகள் விரைவில் நடைபெறவுள்ளன. இதற்கு பயிற்சி பெறும் வகையில் நேபால் மற்றும் அயர்லாந்து அணிகள் டி20 போட்டிகளில் மோதி வருகின்றன.
ஓமனில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி சீரான இடைவெளியில் ரன்களை குவித்து வந்தது. ஆனால் 19ஆவது ஓவரில் நடந்த ஒரு சம்பவம் ஆட்டத்தின் வெற்றி தோல்வியையே மாற்றி அமைத்தது. நேபால் பவுலர் கமல் சிங் வீசிய அந்த ஓவரில் பேட்ஸ்மேன் மார்க் அதிர், மிட் விக்கெட் மீது தூக்கி அடிக்க முற்பட்டார். ஆனால் பந்து பெரியளவில் தூரம் செல்லவில்லை.
இதனையடுத்து நான் ஸ்ட்ரைக்கரில் இருந்த ஆண்டி மெக்பிரைன் சிங்கிள் எடுக்க ஓடினார். அதே சமயத்தில் அருகாமையிலேயே விழுந்திருந்த பந்தை எடுத்து ரன் அவுட்டாக்க பவுலர் கமல் முற்பட்டு, பந்தை எடுத்து விக்கர் கீப்பர் ஆசிஃப் ஷேய்க்கிடம் வீசிவிட்டார். ஆனால் எதிர்பாராத விதமாக அவர் மீது பேட்ஸ்மேன் மோதி கீழே விழுந்தார்.