
தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 27ஆவது லீக் போட்டியில் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் மற்றும் நார்த்தன் சூப்பர்சார்ஜர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணியானது கேப்டன் பில் சால்ட்டின் அதிரடியான அரைசதத்தின் மூலம் இன்னிங்ஸ் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக பில் சால்ட் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் 61 ரன்களைக் குவித்தார்.
நார்த்தன் சூப்பர்சார்ஜர்ஸ் அணி தரப்பில் மிட்செல் சாண்ட்னர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நார்த்தன் சூப்பர்சார்ஜர்ஸ் அணியில் பென் ஸ்டோக்ஸ் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் காயம் காரன்மாக பெவிலியன் திரும்ப, அவரைத்தொடர்ந்து மேத்யு ஷார்ட், ஒலிவர் ராபின்சன் உள்ளிட்டோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் இணைந்த கேப்டன் ஹாரி ப்ரூக் - நிக்கோலஸ் பூரன் ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். பின்னர் 43 ரன்களைச் சேர்த்த நிலையில் ஹாரி ப்ரூக் தனது விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நிக்கோலஸ் பூரன் 2 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 66 ரன்களையும், ஆடம் ஹோஸ் 27 ரன்களையும் சேர்க்க, நார்த்தன் சூப்பர்சார்ஜர்ஸ் அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.
113-METRE OUT THE GROUND!
— The Hundred (@thehundred) August 11, 2024
Oh, Nicholas Pooran! #TheHundred | #RoadToTheEliminator pic.twitter.com/LDayQyjKAT