
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.
முதல் இரண்டு போட்டிகளிலும் அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு கே.எல்.ராகுல் தலைமையிலான இளம் இந்திய அணி விளையாடியது. இந்த நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.
இதையடுத்து ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - மிட்செல் மார்ஷ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர்.