
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இன்று தொடங்கிய நிலையில் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் உலகின் பல்வேறு நாட்டைச் சேர்ந்த நட்சத்திர வீரர்களும் இணைந்து விளையாடவுள்ளதால் இத்தொடரின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அந்தவகையில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் தீவிரமாக தயாராகி வருகிறது.
அதன்படி நாளை நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடவுள்ளது. இதற்காக கேகேஆர் அணி வீரர்கள் திவீரமாக பயிற்சி செய்துவரும் நிலையில், அந்த அணியில் இடம்பிடித்துள்ள ஆஃப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த அதிரடி தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸும் கேகேஆர் பயிற்சி முகாமில் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் இன்றைய தினம் ரஹ்மனுல்லா குர்பாஸ் தனது சக வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்ட போது, அவரை சந்திந்த சிறுவன் ஒருவர் களத்திற்கு வந்தார். அப்போது குர்பாஸ் தன்னை சந்திக்க வந்த சிறுவனிடம் என்ன வேண்டும் என்று கேட்க, அச்சிறுவரும் உங்களது கையுறைகளை பரிசாக வழங்குமாறு கூறினார். அப்போது நேரத்தை சிறிதும் வீணடிக்காமல் குர்பாஸ் தனது கையுறையை அச்சிறுவனிடம் வழங்கியதுடன், அதில் தனது கையொப்பத்தையும் இட்டார். இந்நிலையில் இக்காணொளியானது இணையத்தில் வைரலானாது.