
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முலான்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்ஷிம்ரன் சிங் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் பிரியான்ஷ் ஆர்யா 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 22 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இரண்டாவது பந்திலேயும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
அவர்களைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான பிரப்ஷிம்ரன் சிங் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 30 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி தற்சமயம் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் கேகேஆர் வீரர் ரமந்தீப் சிங் பிடித்த அபார கேட்ச் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.