ஸ்டொய்னிஸை ஸ்தம்பிக்க வைத்த ஜடேஜா; வைரல் காணொளி!
மார்கஸ் ஸ்டொய்னிஸை சிஎஸ்கேவின் ரவீந்திர ஜடேஜா க்ளீன் போல்டாக்கி காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

லக்னோ ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான 45ஆவது போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார். மழை குறுக்கீடு காரணமாக அரை மணி நேரம் தாமதமாக இந்தப் போட்டி தொடங்குகிறது.
இப்போட்டியில் கேஎல் ராகுலிற்கு ஏற்பட்ட காயம் காரணமாக இந்தப் போட்டியில் அவர் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக குர்ணல் பாண்டியாக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்தி லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக கைல் மேயர்ஸ் - மனன் வொஹ்ரா இணை களமிறங்கினர்.
Trending
இதில் தொடக்க வீரர் கைல் மேயர்ஸ் 14 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து 10 ரன்களைச் சேர்த்திருந்த மனன் வொஹ்ராவும் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய கரண் சர்மா 9 கேப்டன் குர்னால் பாண்டியா ரன்கள் ஏதுமின்றியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அதன்பின் அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட மார்கஸ் ஸ்டொய்னிஸ் 6 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ராவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனால் லக்னோ அணி 44 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
What a peach from Ravindra Jadeja.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 3, 2023
Marcus Stoinis' reaction says everything about it! pic.twitter.com/6xooN0BAM1
இந்நிலையில் மார்கஸ் ஸ்டொய்னிஸை ரவீந்திர ஜடேஜே க்ளீன் போல்டாக்கிய காணொளி இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now