
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் இந்தியா வென்றிருந்தது. இதனையடுத்து தொடரை கைப்பற்றும் வாய்ப்புள்ள 2வது போட்டி ராய்பூரில் உள்ள மைதானத்தில் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் நடைபெறும் 50ஆவது மைதானம் இதுவாகும். வெற்றி ஆதிக்கத்தை தொடர்ந்து காட்ட இந்திய அணி வீரர்களும், தோல்விக்கு பதிலடி கொடுக்க நியூசிலாந்து அணியும் முணைப்பு காட்டுவதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்நிலையில் டாஸின் போதே சுவாரஸ்ய விஷயம் நடந்தது. டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் சர்மா என்ன முடிவென்பதை நீண்ட நேரமாக சொல்லாமலேயே தயங்கிக்கொண்டிருந்தார். என்ன ஆனது என புரியாமல் எதிரணி கேப்டனும் குழம்பினார். இறுதியில் பந்துவீச்சை தேர்வு செய்வதாக முடிவெடுத்தார். முதல் முறையாக இந்த களத்தில் சர்வதேச போட்டி நடைபெறுவதால், என்ன தேர்வுசெய்வது என பலகட்ட ஆலோசனை நடந்தது. அதில் குழம்பிவிட்டேன் என விளக்கம் அளித்தார்.