4,6,6,6,4,6 - நோர்ட்ஜே ஓவரில் தாண்டவமாடிய செஃபெர்ட் - வைரலாகும் காணொளி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் வீரர் ரொமாரியோ செஃபெர்ட் ஒரே ஓவரில் 32 ரன்களை விளாசிய காணொளி வைரலாகியுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 234 ரன்களைக் குவித்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா - இஷான் கிஷான் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இருவரது அதிரடியான ஆட்டத்தின் காரணமாக அந்த அணி 6 ஓவர்களில் 75 ரன்களை குவித்தது. இதில் ரோஹித் சர்மா 49 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் ரன்கள் ஏதுமின்றியும், இஷான் கிஷன் 42 ரன்களுக்கும், திலக் வர்மா 6 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் இணைந்த கெப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் டிம் டேவிட் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
Trending
இதில் ஹர்திக் பண்டியா 39 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாலும் டிம் டேவிட் 45 ரன்களை குவித்தார். அதிலும் அவருக்கு துணையாக விளையாடிய ரொமாரியோ செஃபெர்ட் 10 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 39 ரன்களை குவித்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார். அதிலும் குறிப்பாக டெல்லி அணி தரப்பில் இன்னிங்ஸின் 20ஆவது ஓவரை ஆண்ட்ரிச் நோர்ட்ஜே வீசினார்.
— IndianPremierLeague (@IPL) April 7, 2024
On Display: The Romario Shepherd show at the Wankhede
Watch the match LIVE on @JioCinema and @starsportsindia #TATAIPL | #MIvDC pic.twitter.com/H63bfwm51J
அந்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய செஃபெர்ட் அடுத்தடுத்து மூன்று சிக்சர்களை விளாசி மிரட்டினார். அதன்பின் ஐந்தாவது பந்தில் ஒரு பவுண்டரியையும், கடைசி பந்தை சிக்சருக்கு விளாசி அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் அந்த ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி 32 ரன்களை குவித்தது. இந்நிலையில் கடைசி ஓவரில் அதிரடியாக விளையாடிய ரோமாரியோ செஃபெர்ட்டின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now