
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
கவுஹாத்தி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் மிக சிறப்பான துவக்கம் கொடுத்தனர். ரோஹித் சர்மா 43 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 22 பந்துகளில் அரைசதம் அடித்த கேஎல் ராகுல் 57 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார்.
இதன்பின் மூன்றாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த விராட் கோலி – சூர்யகுமார் யாதவ் கூட்டணி தென் ஆப்ரிக்கா அணியின் பந்துவீச்சை நாளாபுறமும் சிதறடித்தது. குறிப்பாக சூர்யகுமார் யாதவ், தென் ஆப்ரிக்கா அணியின் பந்துவீச்சை அசால்டாக சிதறடித்து 18 பந்துகளில் அரைசதமும் அடித்து அசத்தினார்.