
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டி துபாயில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அந்த அணியில் அதிகபட்சமாக சௌத் ஷகீல் 62 ரன்களையும், முகமது ரிஸ்வான் 46 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
அதன்பின் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ரோஹித் சர்மா 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 20 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்படி இன்னிங்ஸின் 5ஆவது ஓவரை ஷாஹீன் அஃப்ரிடி வீசிய நிலையில், அந்த ஓவரின் கடைசி பந்தை அபாயகரமான யார்க்கராக வீசினார். இதனைச் சற்றும் எதிர்பார்க்காத ரோஹித் சர்மா பந்தை தடுக்க தவறிய நிலையில், அவர் க்ளீன் போல்டாகினார். இந்நிலையில் ரோஹித் சர்மா க்ளீன் போல்டான காணொளி வைரலாகி வருகிறது.
— kuchbhi1234567 (@kuchbhi12341416) February 23, 2025