முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்திய ரூதர்ஃபோர்ட் - வைரல் கணொளி!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் தனது முதல் சதங்களை பதிவுசெய்து அசத்தினர்.
வெஸ்ட் - இண்டீஸ் - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி செயிண்ட் கிட்சில் நடைபெறறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் விளையாடிய வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 294 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக தன்ஸித் ஹசன் 60 ரன்களயும், கேப்டன் மெஹிதி ஹசன் 74 ரன்களிலும் ஆட்டமிழக்க, கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய மஹமதுல்லா அரை சதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 295 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. அந்த அணியின் ஷெர்ஃபேன் ரூதர்போர்ட் அதிரடியாக விளையாடியதுடன், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது முதல் சதத்தையும் பதிவுசெய்து அசத்தினர். இப்போட்டியில் அவர் 80 பந்தில் 8 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 113 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
Trending
அவருடன் இணைந்து விளையாடிய கேப்டன் ஷாய் ஹோப்பும் அபாரமாக விளையடியதுடன் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 86 ரன்களைச் சேர்த்து சதமடிக்கும் வாய்ப்பினை தவறவிட்டார். இருப்பினும் இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் 47.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 295 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரில் 1-0 என வெஸ்ட் இண்டீஸ் முன்னிலை வகிக்கிறது. அதேசமயம் இப்போட்டியில் சதமடித்த அசத்திய ரூதர்ஃபோர்ட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
No better feeling than a maiden ton!
— Windies Cricket (@windiescricket) December 8, 2024
Sherfane Rutherford brought the match to life with his CG United Moment of the Match!#WIvBAN | #MatchMoment pic.twitter.com/G95nrtNGLo
Also Read: Funding To Save Test Cricket
இந்நிலையில் இப்போட்டியில் ரூதஃபோர்ட் 95 ரன்களை எடுத்த நிலையில் சௌமீயா சர்க்கார் வீசிய 47அவது ஓவரில் முதல் பந்தை அடித்து விட்டு இரண்டு ரன்களை எடுக்க முயற்சி செய்தார். அதேசமயம் பந்தை ஓடிசென்று பிடித்ததுடன் சௌமியா சர்க்கார் அதனை த்ரோ அடிக்க பந்து நேரடியாக பவுண்டரிக்கு சென்றது. இதனல் ரூதர்ஃபோர்டுக்கு கூடுதலாக 4 ரன்கள் கிடைத்ததுடன், அதன்மூலம் அவர் தனது சதத்தையும் பதிவுசெய்தார். இந்நிலையில் இக்காணொளி வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now