
WATCH: Skipper Rohit Sharma Starts His Preparations Ahead Of South African Tour (Image Source: Google)
இந்திய அணி இம்மாத இறுதியில் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே டெஸ்டாக செஞ்சுரியனில் டிசம்பர் 26ஆம் தேதி தொடங்குகிறது.
இதற்கிடையில் விராட் கோலி தலைமையிலான 18 பேர் அடங்கிய இந்திய டெஸ்ட் அணி கடந்த 8ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த அணியின் துணைக்கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.