
ஐபிஎல் தொடர் நெருங்கியுள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் ஃபார்மை இழந்து தடுமாறி வருகிறார். ஏனெனில் அவர் இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதில் இருந்து அவரின் பேட்டில் இருந்து ரன்கள் வருவதும் குறைய தொடங்கியுள்ளது.
குறிப்பாக தென் ஆப்பிரிக்க டி20 தொடர், இங்கிலாந்து டி20 தொடர்களில் ரன்களைச் சேர்க்க தவறிய சூர்யகுமார் யாதவ், உள்ளூர் கிரிக்கெட் தொடர்களிலும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினார். இதனால் எதிவரும் ஐபிஎல் தொடரை அவர் எவ்வாறு அனுக போகிறார் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேற்கொண்டு அதற்கான பயிற்சியிலும் சூர்யகுமார் யாதவ் ஈடுப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்றைய தினம் சூர்யகுமார் யாதவ் அணியின் பகுதிநேர பந்துவீச்சாளரான திலக் வர்மா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அதன்படி மும்பை இந்தியன்ஸ் தனது அதிகாரப்பூர்வ கணக்கிலிருந்து மும்பை வீரர்களின் பயிற்சி காணொளியை பகிர்ந்துள்ளது, அதில் பகுதி நேர பந்து வீச்சாளர் திலக் வர்மா பந்துவீச்சு பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளார். அதிரடி பேட்டரான இவர் இதற்சமயம் தனது பந்துவீச்சையும் மேம்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார்.