
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியானது இன்று கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியானது அடுத்தடுத்து சீரான வேகத்தில் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் அந்த அணி 18.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 92 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக குஷ்தில் ஷா 32 ரன்களையும், சல்மான் அகா 18 ரன்களையும், ஜஹாந்தத் கான் 17 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொதப்பினர்.
நியூசிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜேக்கப் டஃபி 4 விக்கெட்டுகளையும், கைல் ஜேமிசன் 3 விக்கெட்டுகளையும், இஷ் சோதி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து 92 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டிம் செஃபெர்ட் மற்றும் ஃபின் ஆலன் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கியதுடன், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்தனர்.