
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது. இதில் இன்று நடைபெற்று வரும் இரண்டாவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர்.
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய அபிஷேக் சர்மா 24 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
மறுபக்கம் அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட்டும் தனது பங்கிற்கு அரைசதம் கடந்ததுடன் 9 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 67 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து இணைந்துள்ள இஷான் கிஷான் - நிதீஷ் ரெட்டி இணை சிறப்பான் ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியில் டிராவிஸ் ஹெட் விளாசிய சிக்ஸர் ஒன்று ரசிகர்களை வாயடைக்க செய்துள்ளது.