
மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இன்றைய போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் இளம் சுழற்பந்து வீச்சாளர் விக்னோஷ் புதூர் மீண்டும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் கேகேஆர் அணியில் சுனில் நரைன் பிளேயிங் லெவனிற்கு திரும்பியுள்ளார். இதில் மும்பை இந்தியன்ஸ் அணியானது நடப்பு ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளதன் காரணமாக இப்போட்டியில் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தது.
இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சுனில் நரைன் மற்றும் குயின்டன் டி காக் இணை தொடக்கம் கொடுத்தனர். மும்பை இந்தியன்ஸ் தரப்பில் முதல் ஓவரை டிரெண்ட் போல்ட் வீசினார். அப்போது ஓவரின் 4ஆவது பந்தை எதிர்கொண்ட சுனில் நரைன், டிரென்ட் போல்ட்டின் அபாரமான யார்க்கர் பந்தை கணிக்க தவறியதுடன், இப்போட்டி ரன்கள் ஏதுமின்றி இரண்டாவது பந்திலேயே டக் அவுட்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.