Advertisement

ஓவல் மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் மிகவும் எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும் - விராட் கோலி!

ஓவல் மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் மிகவும் எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும் என்றும், ஆடுகளத்தன்மை மற்றும் சீதோஷ்ணநிலைக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கூறியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan June 06, 2023 • 14:33 PM
Watch Virat Khohli On Playing At The Oval Ind Vs Aus Wtc 2023 Final!
Watch Virat Khohli On Playing At The Oval Ind Vs Aus Wtc 2023 Final! (Image Source: Google)
Advertisement

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் வரும் 7ஆம் தேதி நடைபெறுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்காக இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் தயாராகி வரும் நிலையில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் ஓவல் மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் மிகவும் எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும் என்றும், ஆடுகளத்தன்மை மற்றும் சீதோஷ்ணநிலைக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். 

Trending


இதுகுறித்து பேசிய விராட் கோலி, “ஆஸ்திரேலியா எப்போதும் சவால்மிக்க ஒரு அணி. சிறிய இடைவெளி கொடுத்தாலும் கூட அதை பயன்படுத்தி அவர்கள் வலுவாக ஆதிக்கம் செலுத்த தொடங்கி விடுவார்கள். அந்த அளவுக்கு அவர்களின் ஆட்டத்திறன், தரம் மிகவும் உயரியது. இது தான் அவர்களுக்கு எதிராக நான் அபாரமாக விளையாடுவதற்குரிய உந்துசக்தியை இன்னும் அதிகரிக்க செய்கிறது. 

 

ஆஸ்திரேலியாவை வீழ்த்துவதற்கு எனது ஆட்டத்தை மேம்படுத்தி, எழுச்சி பெற்றாக வேண்டும். லண்டன் ஓவல் மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் மிகவும் எச்சரிக்கையுடன் ஆட வேண்டும். ஆடுகளத்தன்மை மற்றும் சீதோஷ்ணநிலைக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம். பேட்டிங்கின் போது மிக நேர்த்தியாக ஆடுவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement