
Watch Virat Kohli Gets Out For Golden Duck Against Trent Boult Ipl 2023 Rcb vs rr (Image Source: Google)
வார இறுதியான இன்று ஐபிஎல் தொடரில் இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. அதன்படி 32ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் ராயல் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளார். அதேசமயம் இன்றைய போட்டிக்கான ஆர்சிபி அணியை விராட் கோலி வழிநடத்துகிறார்.
அதன்படி ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் விராட் கோலி - ஃபாஃப் டூ பிளெசிஸ் இணை களமிறங்கியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் முதல் ஓவரை வீசிய டிரெண்ட் போல்ட், முதல் பந்திலேயே விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தி ஆர்சிபி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.