 
                                                    ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று லக்னோவில் நடைபெற்ற 29வது லீக் போட்டியில் வலுவான நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதின. இந்த போட்டியில் ஏற்கனவே 4 தோல்விகளை பதிவு செய்து செமி ஃபைனல் வாய்ப்பை ஏறத்தாழ தவற விட்ட இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
குறிப்பாக ஆஃப்கானிஸ்தான், இலங்கை போன்ற அணிகளிடம் தோல்வியை சந்தித்ததால் தங்களுடைய தரத்தை நிரூபிக்க இப்போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் எங்களது களமிறங்கியது. மறுபுறம் ஏற்கனவே 5 தொடர் வெற்றிகளை பதிவு செய்த இந்தியா இந்த போட்டியிலும் இங்கிலாந்தை சொந்த மண்ணில் தோற்கடித்து 6ஆவது வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் விளையாடியது.
ஆனாலும் இப்போட்டியில் சுழலுக்கு சாதகமான மைதானத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்படாமல் இந்திய அணியில் எந்த மாற்றமும் நிகழ்த்தப்படவில்லை. அதைத் தொடர்ந்து தொடங்கிய போட்டியில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்தியாவுக்கு ரோஹித் சர்மா வழக்கம் போல அதிரடியாக விளையாடிய போதிலும் எதிர்ப்புறம் தடுமாறிய ஷுப்மன் கில் 9 ரன்களில் கிறிஸ் ஓக்ஸ் வேகத்தில் கிளீன் போல்டானார்.
 
                         
                         
                                                 
                         
                         
                         
                        