
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக நேற்று முதல் பேட்டிங் பயிற்சியை சீனியர் வீரர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். அதில் ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய ஒரு பந்தை விராட் கோலி அசாத்தியமான ரிவர்ஸ் ஸ்வீப் விளையாடியுள்ளார்.
இந்த காணொளி வெளியாகி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. விராட் கோலியால் மரபு ரீதியான ஷாட்களில் இருந்து வெளி வந்து ரிவர்ஸ் ஸ்வீப் போன்ற ஷாட்களை விளையாட முடிகிறதே என்று வியப்பில் ஆழ்ந்துள்ளனர். அதுவும் ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற நம்பர் 1 டெஸ்ட் பவுலரையும் எளிதாக விராட் கோலி ரிவர்ஸ் ஸ்வீப் அடித்ததுள்ளது ரசிகர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
Virat Kohli playing reverse sweep against Ashwin. [OneCricket] pic.twitter.com/IkglMyI86V
— Johns. (@CricCrazyJohns) July 5, 2023