
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்றுவரும் மிக முக்கியமான லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தி வருகிறது. பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் மற்றும் விராட் கோலி ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் முதல் ஓவரில் நிதாம் காட்டிய இருவரும், அதன்பின் அடுத்த ஓவர்களில் சிக்ஸர்களை பறக்கவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினர். இதன்மூலம் ஆர்சிபி அணி முதல் மூன்று ஓவர்களில் விக்கெட்டுகள் இழப்பின்றி 31 ரன்களைக் குவித்தது.
அதேசமயம் போட்டியின் நடுவே மழை குறுக்கிட்டுள்ளதன் காரணமாக ஆட்டம் தடைபட்டுள்ளது. இதில் ஃபாஃப் டூ பிளெசிஸ் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியும் 12 ரன்களையும், விராட் கோலி 2 சிக்ஸர்களுடன் 19 ரன்களையும் சேர்த்துள்ளனர். இந்நிலையில் இப்போட்டியின் போது விராட் கோலி அடித்த இமாலய சிக்ஸர் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.