
மூன்றாண்டுகளுக்குப் பிறகு ராஜஸ்தான் சவாய் மான்சிங் மைதானத்தில் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் லக்னோ அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இந்த போட்டிக்கான டாசில் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார்.
இதையடுத்து பேட்டிங் செய்ய வந்த லக்னோ அணிக்கு தொடக்கம் தருவதற்கு கே எல் ராகுல் மற்றும் கையில் மேயர்ஸ் இருவரும் களமிறங்கினார்கள். தென்னாபிரிக்க அணியின் விக்கெட் கீப்பிங் அதிரடி பேட்ஸ்மேன் குயின்டன் டி காக்குக்கு இந்தப் போட்டியிலும் லக்னோ அணியில் விளையாட வாய்ப்பு தரப்படவில்லை.
டிரண்ட் போல்ட் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரை கே.எல்.ராகுல் எதிர்கொண்டார். இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக தடுமாற்றம் கொண்ட கே.எல்.ராகுல் தாமே முன்வந்து ஸ்ட்ரைக் எடுத்தது தைரியமான முடிவாக இருந்தது. ஆனால் அந்த ஓவரில் அவர் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. ஓவர் மெய்டன் ஆனது!