அனைவரும் ரன்களுக்காக ஆர்வமாகவும் பசியாகவும் இருக்கிறோம் - ஷுப்மன் கில்!
இதுவரை நாங்கள் ஃபீல்டிங்கில் சராசரியாக மட்டுமே இருந்தோம். ஆனால் இன்று நாங்கள் பீல்டிங் செய்த விதத்தில் மகிழ்ச்சியடைகிறோம் என்று குஜராத் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் சாய் சுதர்ஷன் 48 ரன்களையும், கேப்டன் ஷுப்மன் கில் 76 ரன்களையும், அடுத்து களமிறங்கிய ஜோஸ் பட்லரும் 64 ரன்களையும் சேர்த்து அசத்தினர். இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழப்பிற்கு 224 ரன்களைச் சேர்த்தது. சன்ரைசர்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜெய்தேவ் உனாத்கட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அபிஷேக் சர்மா 74 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்ததால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இந்த போட்டியின் வெற்றி குறித்து பேசிய குஜராத் அணி கேப்டன் ஷுப்மன் கில், “நிச்சயமாக 20 ஓவர்களில் 22 டாட் பந்துகளை மட்டும் விளையாடுவது குறித்து நான் ஏதும் திட்டமிடவில்லை. இதுவரை விளையாடிய ஆட்டத்தை விளையாட முயற்சிப்போம் என்பதுதான் என்னுடைய ஒரே உரையாடலாக இருந்தது. இந்த மைதானத்தில் சிக்ஸர்கள் அடிப்பது எளிதல்ல, ஆனால் நான், சாய் மற்றும் ஜோஸ் விளையாடும் விதத்தைப் பார்த்தால், அதனை எப்படி செய்வது என்ற புரிதல் எங்களுக்கு உள்ளது என நினைக்கிறேன்.
மேலும் எங்களில் யாரேனும் ஒருவர் களத்தில் இருக்க வேண்டும் என்ற உரையாடலை நாங்கள் இதுவரை செய்ததில்லை என்று நினைக்கிறேன். நாங்கள் அனைவரும் ரன்களுக்காக ஆர்வமாகவும் பசியாகவும் இருக்கிறோம், அணிக்கு சிறந்ததைச் செய்கிறோம். ஒவ்வொரு ஆட்டத்திற்கும் முன்பு நாங்கள் பேசிய ஒரு விஷயம் ஃபீல்டிங், ஏனெனில் இதுவரை நாங்கள் ஃபீல்டிங்கில் சராசரியாக மட்டுமே இருந்தோம். ஆனால் இன்று நாங்கள் பீல்டிங் செய்த விதத்தில் மகிழ்ச்சியடைகிறோம்.
Also Read: LIVE Cricket Score
எல்லோரும் சிறப்பாக செயல்படுகிறார்கள், இந்த மைதானங்களில் நீங்கள் அடித்த ஸ்கோரை பாதுக்காக்க விரும்பும் போது உங்களிடம் நிறைய பந்துவீச்சு விருப்பங்கள் இருப்பது எப்போதும் நல்லது. மேலும் இந்த போட்டியில் எனக்கு நடுவர்களுக்கும் இடையே சிறிது விவாதம் நடந்தது, சில நேரங்களில் நீங்கள் உங்கள் 110 சதவீதத்தை கொடுக்கும்போது பல உணர்ச்சிகள் இருக்கும். அதில் ஒன்று தான் இது” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now