பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை விளையாடுவோம் - ஸ்காட் எட்வர்ட்ஸ்!
அடுத்து நாங்கள் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நல்ல ஒரு ஆட்டத்தை விளையாடுவோம் என நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியா - நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை தொடரின் லீக் சுற்றுப்போட்டியானது நேற்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது நெதர்லாந்து அணியின் பந்துவீச்சை சிதறடித்து இரண்டு விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தினர்.
பின்னர் 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய நெதர்லாந்து அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் மட்டுமே குவித்ததால் 56 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. ஏற்கனவே இந்த போட்டிக்கு முன்னதாகவே இந்திய அணி இந்த போட்டியில் எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் நெதர்லாந்து அணி இந்திய அணிக்கு எதிராக சற்று போராடி தோல்வியை சந்தித்தது ரசிகர்கள் மத்தியில் பாராட்டினை பெற்றுள்ளது.
Trending
இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ்,“இந்த மைதானத்தில் நாங்கள் விளையாடிய போது ரசிகர்களின் ஆரவாரம் இந்திய அணிக்கு மிகப்பெரும் அளவில் சப்போர்ட் செய்தது. ஏனெனில் ரசிகர்கள் எழுப்பிய முழக்கங்களால் ஒரு சில நேரத்தில் நான் பேசியது கூட எனது அணி வீரர்களுக்கு கேட்டிருக்காது. அந்த அளவிற்கு ரசிகர்களின் குரல் ஆரவாரமாக இருந்தது.
அதேபோன்று இந்த போட்டியில் விளையாடியது எங்களுக்கு நல்ல ஒரு அனுபவமாக இருந்தது. நாங்கள் இந்த அளவிற்கு வந்து விளையாடுவதே எங்களுக்கு மிகப்பெரும் பெருமிதம். அதிலும் குறிப்பாக இந்தியா போன்ற பெரிய அணிகளுக்கு எதிராக விளையாடுவது நல்ல பாடத்தை எங்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளது.
இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை நாங்கள் 180 ரன்களுக்குள் சுருட்டியதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறோம். இருந்தாலும் இந்த போட்டியில் தோல்வி பெற்றதை விட நாங்கள் இந்த போட்டியில் விளையாடி பெற்ற அனுபவம் எங்களுக்கு மிகச் சிறப்பாக இருந்தது. நாங்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் விக்கெட்டுகளை எடுத்து இருந்தால் இன்னும் சற்று குறைவாக இந்திய அணியை நிறுத்தி இருக்க முடியும்.
ஆனால் இந்தியா போன்ற பலமான அணியை குறைவான இலக்கில் நிறுத்த முடியாது என்பது உண்மைதான். இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதற்கு அடுத்து நாங்கள் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நல்ல ஒரு ஆட்டத்தை விளையாடுவோம்” என தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now