Advertisement

விராட் கோலியின் ஆட்டம் குறித்து பிரையன் லாரா கருத்து!

ஆர்சிபிக்கு எதிராக தோல்வியடைந்தது குறித்து, பெங்களூரு அணியின் விராட் கோலியின் ஆட்டம் குறித்தும் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளர் பிரையன் லாரா கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisement
We came up against Virat Kohli at his best: Brian Lara!
We came up against Virat Kohli at his best: Brian Lara! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 19, 2023 • 02:49 PM

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றிபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஹென்ரிச் கிளாசெனின் அபாரமான சதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 186 ரன்களை குவித்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
May 19, 2023 • 02:49 PM

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணி விராட் கோலி மற்றும் ஃபாஃப் டூ பிளெசிஸ் ஆகியோரது அபாரமான ஆட்டத்தின் முலம் 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.   

Trending

இப்போட்டியில் பெங்களூரு அணியின் விராட் கோலி 63 பந்துகளில் 100 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். மேலும், இப்போட்டியில் சிறப்பாக ஆடிய விராட் கோலி ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார். இப்போட்டியில் தோல்வியடைந்தது குறித்து, பெங்களூரு அணியின் விராட் கோலியின் ஆட்டம் குறித்தும் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளர் பிரையன் லாரா கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “எங்கள் அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால், நாங்கள் விராட் கோலியின் மிகச்சிறந்த ஆட்டத்தை எதிர்கொண்டோம். நடப்பு தொடரில் பெங்களூருக்கு சிறப்பாக விளையாடி வரும் டூ பிளெசிஸை எதிர்கொண்டோம். அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் தற்போது டூ பிளெசிஸ் முதல் இடத்தில் உள்ளார். . ஒட்டுமொத்தமாக உலகத்தரம் வாய்ந்த 2 வீரர்களை நாங்கள் எதிர்கொண்டோம். ஒட்டுமொத்தமாக எங்கள் அணியினர் நல்ல முயற்சி மேற்கொண்டனர் என நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now