
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர்கள் முடிந்து இந்திய அணி வீரர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து புறப்பட்டு சென்றுள்ளனர் . இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி வருகின்ற 7ஆம் தேதி இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டன் நகரில் அமைந்திருக்கும் ஓவல் மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது .
கடந்த 2021-2023 ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி வருகின்ற 7ஆம் தேதி நடைபெற இருக்கிறது . இந்தப் போட்டியில் விளையாட உள்ள இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணியின் வீரர்கள் இங்கிலாந்து புறப்பட்டு சென்றனர் . ஐபிஎல் தொடர் முடிவடைந்ததால் கிரிக்கெட் ரசிகர்களும் இந்த போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் .
நடந்து முடிந்த டெஸ்ட் சைக்கிளில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணி முதல் இரண்டு இடங்களை பெற்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது . கடந்த முறையும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்தியா நியூசிலாந்து அணி இடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது .