
We Could Have Been One-Nil Up, But Unfortunately, The Weather Has Won: Joe Root (Image Source: Google)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இப்போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டத்தின் போது இந்திய அணி வெற்றி பெற 157 ரன்கள் மட்டுமே தேவை பட்டது. மேலும் இந்திய அணியின் கைவசம் 9 விக்கெட்டுகளும் இருந்தன. இதனால் இந்திய அணியின் வெற்றியை மழை தடுத்துவிட்டது என சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்தியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் நாங்கள் பெற வேண்டிய வெற்றியை மழை பறித்துவிட்டது என இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ள ரசிகர்கள் மத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.