
வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அதில், 2-1 என்ற கணக்கில் வங்கதேச அணி தொடரை கைப்பற்றியது. இதையடுத்து, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட்டில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து, 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
இந்த நிலையில், விராட் கோலி மற்றும் சச்சின் டெண்டுல்கரை ஒப்பிட்டு வங்கதேச அணியின் பயிற்சியாளர் அல்லான் டொனால்டு கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் பேசிய அவர், “3ஆவது ஒரு நாள் போட்டியில் விராட் கோலியை 1 ரன்னில் அவுட்டாக்கியிருக்க வேண்டியது. மெஹிடி ஹசன் ஓவரில் ஷார்ட் மிட் விக்கெட் திசையில் நின்றிருந்த லிட்டன் தாஸ், விராட் கோலி கொடுத்த கேட்ச்சை தவறவிட்டார். இதன் மூலம் அவர் சதம் அடித்து தனது 44ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். இஷான் கிஷானின் அதிரடி ஆட்டம் ஆகியவற்றின் மூலமாக இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.