
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வரும் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை கோலாக்கலமாக தொடங்க உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிக்கப் போகும் இந்த தொடரில் இம்முறை 16 அணிகளுக்கு பதிலாக 20 அணிகள் மொத்தம் 55 போட்டிகளில் கோப்பையை வெல்வதற்காக மோத உள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது.
அதில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி வரும் ஜூன் மாதம் 9ஆம் தேதி அமெரிக்காவில் நடைபெற உள்ளது. முன்னதாக ஆஸ்த்ரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணியை நமீபியாவும் வலுவான தென் ஆப்பிரிக்கா அணியை நெதர்லாந்தும் அசால்டாக தோற்கடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
அந்த வகையில் இம்முறை 4 எக்ஸ்ட்ரா கத்துக்குட்டி அணிகள் விளையாடுவதால் 2024 உலகக் கோப்பையில் இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற டாப் அணிகள் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது அவசியம் என்றே சொல்லலாம். இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு தங்களுக்கு பிரகாசமான வாய்ப்புகள் இருப்பதாக வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.