
முல்லன்பூரில் நேற்று நடைபெற்ற முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பாஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது ஐபிஎல் தொடர் வரலாற்றில் 4ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதித்துள்ளது. அதேசமயம் இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வியைத் தழுவி இருந்தாலும், இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. மேலும் இப்போட்டியில் ஆர்சிபி அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சுயாஷ் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், “இது நாங்கள் மறக்க வேண்டிய நாளில் ஒன்று. நாங்கள் எங்கள் இன்னிங்ஸின் தொடக்கம் முதலே நாங்கள் விக்கெட்டுகளை இழந்தோம். இதுகுறித்து சிந்திக்க வேண்டியது நிறைய இருக்கிறது. நேர்மையாகச் சொல்லப் போனால், எனது முடிவுகளை நான் சந்தேகிக்கவில்லை. ஏனெனில் நாங்கள் திட்டமிடல் அடிப்படையில் என்ன செய்தாலும் அது சரியானது என்று நான் நினைக்கிறேன்.