Advertisement
Advertisement
Advertisement

ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன்சி கிடைத்தது எப்படி? - கங்குலியின் பதில்!

ஹர்திக் பாண்டியாவிற்கு சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டன் பொறுப்பு கிடைத்தது எப்படி? என்பது குறித்து தனது சமீபத்திய பேட்டியில் வெளிப்படையாக பேசி உள்ளார் சௌரவ் கங்குலி.

Bharathi Kannan
By Bharathi Kannan March 28, 2023 • 12:50 PM
“We Have Seen How Well Hardik Pandya Has Captained In The IPL” – Sourav Ganguly
“We Have Seen How Well Hardik Pandya Has Captained In The IPL” – Sourav Ganguly (Image Source: Google)
Advertisement

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தற்போது கேப்டன் ஆக உயர்ந்திருக்கும் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, 2021 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இடம் பிடிப்பதே கடினம் என்ற அளவிற்கு இருந்து வந்தார். 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் இவரது கிரிக்கெட் வாழ்க்கையை உச்சத்தில் எடுத்துச் சென்றது. முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்த ஹர்திக் பாண்டியா அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனால் இவரால் முழுமையாக பந்துவீச முடியாது என்று கூறப்பட்டது. இதனால் 2021ஆம் ஆண்டு ஐபிஎல்-க்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி இவரை அணியில் இருந்து ரிலீஸ் செய்தது.

மிகவும் உடைந்து போன ஹர்திக் பாண்டியா, தீவிர பயிற்சியில் ஈடுபட்டு மெல்ல மெல்ல தனது இயல்பான பந்துவீச்சிற்கு திரும்பினார். இவர் மீது நம்பிக்கை வைத்து குஜராத் டைட்டன்ஸ் அணி 15 கோடி ரூபாய்க்கு எடுத்தது. மேலும் கேப்டனாகவும் நியமித்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் அணிக்கு முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை பெற்று தந்தார். பின்னர் இந்திய அணியிலும் மீண்டும் இடம் பிடித்தார். டி20 உலக கோப்பையில் பேட்டிங் பௌலிங் இரண்டிலும் நன்றாக செயல்பட்டார்.

Trending


இந்திய அணி அரையிறுதி சுற்றுடன் வெளியேறியதால், ரோஹித் சர்மாவின் கேப்டன்சி மீது அதிருப்தி ஏற்பட்டது. அந்த தொடர் முடிவுற்ற உடனேயே சீனியர் வீரர்களை டி20 திட்டத்திலிருந்து நீக்கம் செய்தனர். இளம் வீரர்கள் கொண்ட பட்டாளத்திற்கு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாகவும் நியமித்தது. இவரும் கேப்டன் பொறுப்பில் மிகவும் சிறப்பாகவே செயல்பட்டார்.

இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவிற்கு எப்படி கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டது என்பது குறித்து சவுரவ் கங்குலிய தெளிவாக பேசி உள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ஐபிஎல் போட்டிகளில் எவ்வளவு சிறப்பாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டார் என்பதை பார்த்தோம். கேப்டன் பொறுப்பு அவருக்கு கொடுக்கப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம். ஏனெனில் ஐபிஎல் போட்டிகளில் நிகழும் வெற்றி தோல்வியை சர்வதேச கிரிக்கெட்டில் எடுத்துக்கொள்ளாமல் இருக்க முடியாது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் வீரர்களுக்கான வீரர்களுக்கான தொடர் அது.

அதன் பிறகு நடந்த ஆசிய கோப்பைத் தொடர் மற்றும் டி20 உலககோப்பைத் தொடர் இரண்டிலும் பேட்டிங் பௌலிங் இரண்டிலும் ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டார். சீனியர் வீரர்கள் 50 ஓவர் உலகக்கோப்பையில் கவனம் செலுத்த வேண்டும். அதேநேரம் இளம் பட்டாளம் கொண்ட டி20 அணியை உருவாக்க வேண்டும். அதற்கு துடிப்புமிக்க கேப்டனாகவும் ஹர்திக் பாண்டியா இருப்பார் எனப்பட்டது. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத நேரத்தில் குஜராத் அணிக்கு வெற்றியை பெற்று தந்திருக்கிறார் என்பதால், கவனம் அவர் மீது சென்றது” என தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement