
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற 18ஆவது லீக் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலிய மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக கிரேஸ் ஹாரிஸ் 40 ரன்களையும், தஹ்லியா மெக்ராத் மற்றும் எல்லிஸ் பெர்ரி ஆகியோர் தலா 32 ரன்களைச் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் ரேனுகா சிங் மற்றும் தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
இதையடுத்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ஷஃபாலி வர்மா 20 ரன்னிலும், ஸ்மிருதி மந்தனா 6 ரன்னிலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 16 ரன்னிலும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் உடர் இணைந்த தீப்தி சர்மா அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.