பந்துவீச்சில் ரன்களை வாரி வழங்கியதே தோல்விக்கு காரணம் - ஸ்காட் எட்வர்ட்ஸ்!
நாங்கள் 40 ஓவர்கள் வரை சிறப்பாக செயல்பட்ட தாங்கள் நியூசிலாந்தை 280 – 300 ரன்களுக்கு கட்டுப்படுத்தி இருந்தால் வெற்றிக்கான வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் கூறியுள்ளார்
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் கத்துக்குட்டியான நெதர்லாந்தை 99 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த நியூசிலாந்து தங்களுடைய 2ஆவது வெற்றியை பதிவு செய்தது. மதியம் 2 மணிக்கு நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து சிறப்பாக செயல்பட்டு 50 ஓவரில் 322 ரன்கள் எடுத்தது.
அதைத்தொடர்ந்து 323 என்ற இலக்கை துரத்திய நெதர்லாந்து ஆரம்பம் முதலே நியூசிலாந்தின் தரமான பந்து வீச்சில் சுமாராக செயல்பட்டு சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து ஓவரில் 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு விக்ரம்ஜித் சிங் 12, மேக்ஸ் ஓடவுட் 16, பஸ் டீ லீடி 18, கேப்டன் எட்வட்ர்ஸ் 30 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறிய நிலையில் அதிகபட்சமாக காலின் ஆக்கர்மேன் 69 ரன்கள் எடுத்தார்.நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் சான்ட்னர் 5 விக்கெட்டுகளை சாய்த்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
Trending
இந்நிலையில் இப்போட்டியில் தோல்வியடைந்தது குறித்து பேசிய நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ், “நாங்கள் முதல் 40 ஓவர்களில் நன்றாக செயல்பட்டோம். ஆனால் கடைசி 3 ஓவரில் அவர்கள் நாங்கள் வெற்றிக்காக நம்பிய ஸ்கோரை விட அதிகமாக எடுத்தனர். குறிப்பாக இன்றைய பிட்ச் பேட்டிங்க்கு நன்றாக இருப்பதால் அவர்களை 280 – 300 ரன்களை கட்டுப்படுத்தி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
இருப்பினும் நியூசிலாந்து பவுலிங் அட்டாக் நேர்த்தியாக இருந்தது. அவர்கள் எளிதான ரன்களை கொடுக்கவில்லை. அதனால் 321 ரன்களை 30, 40, 50 போன்ற ரன்கள் அடித்து உங்களால் எட்ட முடியாது. எனவே அடுத்து வரும் போட்டிகளில் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்து பெரிய ரன்கள் குவிப்பது பற்றி எங்கள் வீரர்களிடம் பேசுவோம். அடுத்த போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி காண முயற்சிப்போம்” என்று கூயுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now