கடைசி நேரத்தில் முடிவெடிப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை - ரோஹித் சர்மா!
டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான அணியை ஏற்கனவே தேர்வு செய்து விட்டேன் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் எட்டாவது டி20 உலகக்கோப்பை தொடரானது நாளை (அக்டோபர் 16) முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இதற்காக ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் பயிற்சி மேற்கொண்டிருக்கும் இந்திய அணி இதுவரை இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாடியுள்ளது.
அதேசமயம் பிரிஸ்பேனில் மேலும் இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாடும் இந்திய அணி முதல் உலகக் கோப்பை ஆட்டமாக அக்டோபர் 23 அன்று பாகிஸ்தானுடன் மோதுகிறது. இந்நிலையில் இத்தொடரில் விளையாடும் 16 அணிகளும் கேப்டன்களும் ஐசிசியின் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றனர்.
Trending
இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, “கடைசி நேரத்தில் முடிவெடிப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. முன்னமே தேர்வு செய்யப்பட்ட தகவலை வீரர்களிடம் சொல்லி விடுவேன். ஏனெனில் அப்போதுதான் அவர்களால் நன்றாக பயிற்சி எடுக்க முடியும். இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் முக்கியமானதுதான்.
ஆனால், ஒவ்வொரு முறையும் இதைப்பற்றி பேசுவதில் எந்தவித பயனும் இல்லை. பாகிஸ்தான் வீரர்களுடன் ஆசியக் கோப்பை போட்டியின் போதும்கூட, வீட்டில் என்ன கார் வைத்துள்ளாய் , குடும்பம் எப்படியுள்ளது என்றுதான் பேசிக்கொள்வோம்.
ஷமியை இன்னும் நான் பார்க்கவில்லை. ஆனால் கேள்விப்பட்ட விஷயம் நல்லது. விரைவில் பயிற்சியின் போது சந்திப்பேன். காயத்தைப் பற்றி கவலைப்படப் போவதில்லை. அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். சூர்ய குமார் யாதவ் எக்ஸ் ஃபேக்டராக இருப்பார். அவரது அபாரமான ஃபார்மை தக்க வைத்துக்கொள்வாரென நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now